Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொளுத்தும் வெயிலால் குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

தென்காசி, ஜூன் 18: குற்றாலத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மே மாதத்தின் 2வது வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான சீசன் கடந்த ஜூன் 3ம் தேதிதான் துவங்கியது. அதைத்தொடர்ந்து சுமார் 10 நாட்கள் சாரல் நன்றாக பெய்த நிலையில் கடந்த 4 தினங்களாக சாரல் மறைந்து வெயில் காணப்படுகிறது. மேகமூட்டமும் இல்லை. மாலையில் மட்டும் இதமான காற்று வீசுகிறது. தொடர்ந்து நான்கு தினங்களாக சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறையத் தொடங்கியுள்ளது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் இரு பிரிவுகளின நன்றாகவும் மூன்று பிரிவுகளில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி புலி அருவி ஆகியவற்றிலும் குறைவாக தண்ணீர் வருகிறது. தொடர்ந்து நான்கு தினங்களாக சாரல் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளது.