காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் வனப்பகுதியை பாதுகாக்க மரக்கன்றுடன் வந்த கிராம மக்கள்
நெல்லை, ஆக.17: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள் மரக்கன்று நட்டி வனத்தை பாதுகாத்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த கோயில் குலதெய்வமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவை காண காட்டுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அதேசமயம் திருவிழாக்கள் மூலம் பக்தர்கள் ஆற்றையும் வனத்தையும் பாழாக்குவதை தடுக்க வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாரம்பரியம் மாறாமல் இன்னும் மக்கள் குடும்பத்தோடு குடில்கள் அமைத்தபடி ஆடி அமாவாசை திருவிழாவை கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் சுமார் 1500 குடில்கள் அமைத்து தங்கினர்.


