Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர ஆய்வாளர் இல்லாததால் பணிகள் பாதிப்பு

ஆலங்குளம், அக்.15: ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர ஆய்வாளர் இல்லாததால் பொதுமக்கள் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பதால் உடனடியாக ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகவல்லி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் பணியிட மாறுதலாகி சென்றார். அதன்பின் நிரந்தர ஆய்வாளர் நியமிக்கப்படாததால் அம்பாசமுத்திரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவர் வாரத்தில் செவ்வாய், வெள்ளிகிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ஆலங்குளம் அலுவலகத்திற்கு வந்து பணிகளை கவனித்து வந்தார்.

தற்போது அவர் ஆலங்குளத்திற்கு பதில் நெல்லைக்கு கூடுதலாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தென்காசியில் பணிபுரியும் ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாக ஆலங்குளத்தை கவனித்து வருகிறார். இதனால் கடந்த 7 மாதங்களாக பொதுமக்கள் தங்களது பணிகளை முடிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுபித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். ஆனால் அங்கு நிரந்தரமான வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் பணிகள் தாமதமடைவதுடன், பலமுறை வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கிறது.

இதனால் தங்களுக்கு வீண் செலவுடன் அலைச்சலும் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலகத் திற்கு உடனடியாக நிரந்தர வட்டார போக்குவரத்து ஆய்வாளரை நியமித்து, பொதுமக்களின் பணிகள் விரைவாகவும்,முறையாகவு ம் நடைபெற அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.