Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பண்பொழி அருகே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையில் செம்மண் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

செங்கோட்டை, அக். 15: பண்பொழி அருகே திருமலாபுரம் பகுதியில் கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலையில் செம்மண் கொட்டியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலஞ்சியில் உள்ள ரயில்வே பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் மதுரை, விருதுநகர், சுரண்டை போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இலத்தூர் விலக்கு வழியாக கணக்கப்பிள்ளை வலசை சென்று செங்கோட்டை அடைந்து கேரளா சென்றன. கணக்கப்பிள்ளை வலசை - பண்பொழி வழியாக செங்கோட்டை செல்லும் சாலையும், கணக்கப்பிள்ளை வலசையில் இருந்து சுப்பிரமணியபுரம் வழியாக செங்கோட்டை செல்லும் சாலைகளும் கிராம சாலைகள் ஆகும்.

இந்த சாலைகளில கடந்த சில ஆண்டுகளாக கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற கனரக லாரிகளால் கிராம சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. சேதமடைந்த சாலைகளில் கடந்த ஒருமாதத்தில் நடந்த விபத்துகளில் 10பேர் உயிரிழந்துள்ளனர்.நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதாலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சாலை பராமரிக்கப்படாததால் சேதமடைந்து குண்டும் குழியுமாக சீரற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அளவிற்கு சாலை உள்ளது.

இரவில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது மண்ணை போட்டு சரிசெய்துவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பண்பொழியில் இருந்து செங்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திருமலாபுரம் பகுதியில் கனரக வாகனங்களால் பல மாதங்களுக்கு முன் சேதமடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மிக மோசமான நிலையில் காணப்படும் சாலையை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருந்தபோதும், அதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஏதோ கடமைக்கு பணி செய்ய வேண்டும் என்பது போல குளத்தில் அள்ளிய செம்மண், உடைந்த செங்கல் துண்டுகளை சாலையில் உள்ள பள்ளத்தில் கொட்டி சென்றனர்.

இதைதொடர்ந்து மழை பெய்ததால் செம்மண் சகதியானதால் அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் சாலையில் வழுக்கி கீழே விழுந்தனர். தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் என இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.