Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருக்கைகள் இன்றி பயணிகள் வெயிலில் பரிதவிப்பு

நெல்லை, ஜூலை15: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் போதிய இடங்கள் இருந்தும் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கைகள் இன்றி சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும் அவலம் உள்ளது. நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் ரூ.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்படடு திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து மாநகர், புறநகர் பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகரத்தின் மையப்பகுதியில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் தெற்கு பகுதி வழியாக உள்ளே வரும் பஸ்கள் மேற்கு பகுதிவழியாக வெளியே செல்கின்றன. அதுபோல் தென்காசி பஸ்கள் தெற்கு பகுதி நுழைவு வாசல் வழியாக உள்ளே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு கிழக்கு பகுதி வழியாக செல்கின்றன. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் கிழக்கு பகுதி, தெற்கு பகுதி கட்டிடத்தில் தேவையான இடங்கள் உள்ளன.

ஆனால் போதிய இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பஸ்நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு தேவையான இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. ஆகையால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தென்காசி பஸ் நிறுத்தம் மற்றும் தெற்கு பகுதி நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் நிழல் தேடி ஒதுங்கி நிற்கும் அவலநிலை காணப்படுகிறது. இவ்வளவு ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள பஸ்நிலையத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் தாகத்தை தணிக்க அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்களும் பழுதாகி உள்ளன. இதனை பழுதுநீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காத நிலை தொடர்வதாகவும், பயணிகளுக்கு போதிய இருக்கைகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொதிக்கும் குடிநீர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் குடிநீர் இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. இதுகுறித்து செய்திகள் வெளியிடப்பட்டது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பழுது நீக்காமல் நல்ல வெயில் அடிக்கும் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டிகளை வைத்து தண்ணீர் நிரப்பி விடுகின்றனர். இந்த தண்ணீர் பகல் நேரங்களில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தால் சுடுநீராகி விடுவதால் தாகம் தணிக்க வரும் பயணிகள் தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.