Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

களக்காடு அருகே இரவில் கனமழை: இடி மின்னல் தாக்கி மின் சாதனங்கள் நாசம்

களக்காடு,அக்.14: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை போல் வெயில் கொளுத்தி வந்தது. இதேபோல் களக்காடு அருகே திருக்குறுங்குடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியது. இதனால் திருக்குறுங்குடி பெரியகுளம் உள்பட கால்வாய்கள் தண்ணீரின்றி வறண்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் காதை பிளக்கும் இடி சத்தத்துடனும், கண்களை பறிக்கும் வகையில் மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இருப்பினும் தாழ்வான ஒருசில பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. மழையின் போது நம்பிதலைவன் பட்டயம் கீழத்தெருவை சேர்ந்த சந்திரன் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம், வீட்டின் சுவர் சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் மின் சாதனங்கள் கருகின. 10 டிவிக்கள், 5 இன்வெட்டர்கள், பேன்கள் மின்னல் தாக்கியதில் நாசமானது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். மழையினால் வறண்டு கிடந்த நம்பியாறு, கால்வாய்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததையடுத்து விவசாயிகள் பணிகளை தீவிரமடைந்துள்ளனர்.