Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டம்

தென்காசி, ஜூலை 12: தென்காசியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் மதிவாணன் தலைமை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரவன் வரவேற்றார். பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் அய்யனார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் டிஎம்எஸ் பிரிவு மாநில செயலாளர் ஜெஸ்லின், ஓய்வு பெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆனந்தன், புன்னைவனம், கதிரவன், மேற்பார்வையாளர்கள் முருகன், மாரிமுத்து, செல்லையா வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட தலைவராக மாரியப்பன், துணைத் தலைவர்களாக மதிவாணன், பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளராக சந்திரசேகர், இணைச் செயலாளர்களாக தங்கப்பாண்டி, முத்துமாரி,மாவட்ட பொருளாளராக செந்தில்குமார், தணிக்கையாளர்களாக சீதாராமன், சுடலைமணி தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பொதுசுகாதார துறையில் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்பார்வையாளர், நலக் கல்வியாளர், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.

காலியாக உள்ள பணியிடத்தில் பணியில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பொறுப்பு ஏற்க வைக்கும் நடவடிக்கையை வருகின்ற 16ம் தேதி முதல் புறக்கணிப்பது, சுகாதார ஆய்வாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.20,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புளியங்குடியில் அமைச்சர் ராஜீவ் விவசாயிகளுடன் சந்திப்பு புளியங்குடி, ஜூலை 13: தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் நான்கு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற 28வது ஜூனியர் தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வாசுதேவநல்லூரைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட மாணவர்களை அமைச்சர் ராஜீவ் சந்தித்து பாராட்டி, பரிசுத்தொகை வழங்கினார். தொடர்ந்து டிஎன் புதுக்குடி நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு 10,12ம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் எஸ்டி கல்வி குழுமங்களின் தாளாளர் தங்கப்பழம், மகமை கமிட்டி தலைவர் மாரியப்பன், தவெக மாவட்ட செயலாளர் மாரியப்பன், காந்திமதி, விவேகானந்தன், முருகேசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சவுந்தர பாண்டியன், வர்த்தக அணி இணை செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் வெங்கடேசன், கண்ணன் மற்றும் ஊர் நாட்டாண்மைகள், கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.