Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு அனைவரும் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்

தென்காசி ஜூலை 13: தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 2024ல் இருந்து தமிழ்நாடு உரிமைகள் திட்டம் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ளமாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகிறோம். இரண்டு வருடத்திற்கும் மேலாக 3 லட்சத்திற்கும் மேல் கணக்கெடுத்து இருக்கிறோம். விடுபட்டவர்களுக்கும் கணக்கெடுக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் மூலம்பேருந்து சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வட்டாரஅளவிலான சேவை மையங்கள் மூலம் சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உடற்பயிற்சி மூலம் மருத்துவ சிகிச்சை அல்லாமல் ஸ்பீச் தெரப்பி மற்றும் பிசியோதெரபி மூலம் சிகிச் சை அளிக்கப்படுகிறது.

உட்கோட்டஅளவிலான ஒருங்கிணைந்த சேவை யைமங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பீச் தெரப்பி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமர்சேவா சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மொபைல் நடமாடும் சிகிச்சை மையங்கள் இயக்கப்படுகிறது. அரசின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வீடு வீடாக பணியாளர்கள் சென்று மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களை கேட்டு வருகின்றனர். தற்போது வரை 4 லட்சம் நபர்களிடம் இருந்து தகவல் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களின் தகவல்களை கேட்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தில் நிறைய பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் அதிக திட்ட உதவிகள் கிடைக்கிறது. இம்மையங்களுக்குச் சென்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இம்மையங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். குற்றாலம் அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மெயின் அருவியில் பெண்கள் உடைமாற்றும் அறை திறக்கப்பட்டுள்ளது. அதில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாரல் திருவிழா பொதுவாக ஜூலை மாதத்தின் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் 15ம் தேதிக்குள் நடத்தப்படுவது வழக்கம் தற்போது இந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.