Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவழூதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான 4.46 ஏக்கர் நிலங்கள் மீட்பு

ஏர்வாடி,அக்.10: ஏர்வாடி திருவழூதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான 4.46 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டது. ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற திருவழூதிஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பிலான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது. இதனை குத்தகை எடுத்த பலர் முறையாக பணம் காட்டாமல் பாக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியும், ஆக்கிரமிப்பாளர்கள் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நெல்லை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தி நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் இடத்தை மீட்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று ஏர்வாடி பெருந்தெரு பகுதியில் உள்ள 4.46 ஏக்கர் நஞ்சை நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நெல்லை உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் அறநிலையத்துறை தாசில்தார் வள்ளிநாயகம், நாங்குநேரி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோமதி, ஏர்வாடி வருவாய் ஆய்வாளர் பிரவீன் குமார், கிராம நிர்வாக அதிகாரி கவிதா, கோயில் நிர்வாக அதிகாரி சங்கர பாண்டியன் மற்றம் கோயில் பணியாளர்கள் அதிரடியாக மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். முன்னதாக ஆக்கிரமிப்புகளை மீட்கும் போது அசம்பாவதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஏர்வாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.