Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி, அக்.10:குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகுவிமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 6.05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை கணேசன் தலைமையில் பிச்சுமணி, ஜெயமணி சுந்தரம், மகேஷ் ஏற்றி வைத்தனர். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், ராமலட்சுமிபெருமாள், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையாபாண்டியன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், அருண், ராசி சுரேஷ், முத்துக்குமார், சிவவடிவேலன், சொக்கம்பட்டி ஜமீன்தார் பெரிய அனஞ்சி, சின்ன அனஞ்சி வம்சாவழி ஊர் பொதுமக்கள் சார்பில் வெள்ளத்துரை, மாரி, சொக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வகுமார், தங்கபாண்டியன் பால்பாண்டியன், முத்துக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிவபூதகண வாத்தியங்களும் இசக்கப்பட்டன. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், இரவில் கோயில் உள்பிரகாரத்தில் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவில் 12ம் தேதி கேடயத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலையில் 8.40 மணிக்கு மேல் 9.40மணிக்குள் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் கோயில் கேடயத்தில் எழுந்தருளல் நடக்கிறது. அக்.15ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் கோயில் மணிமண்டபத்தில் வைத்து நடராசமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனை நடக்கிறது.

16ம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கோயில் மணிமண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18ம் தேதி காலையில் 10.40 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி, 11.40 மணிக்கு மேல் கேடயத்தில் காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோஜாலி சுமதா, உதவி ஆணையர் ஆறுமுகம் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தர், ராமலட்சுமி, சுந்தரராஜ், வீரபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.