தியாகராஜநகர் ஆக.10: நெல்லை நகர்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பு: தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.10) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் , செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப்பாலம் வரை வடக்கு புறவழிச்சாலை, இளங்கோநகர், காவேரி மருத்துவமனை பகுதி, இந்திராகாலனி, கரிமேடு பகுதி, எட்டுத்தொகை தெரு, கம்பராமாயண தெரு, எட்டுப்பாட்டுதொகை தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
+
Advertisement



