Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாளை சவேரியார் பள்ளி 76 புள்ளிகள் பெற்று முதலிடம்

நெல்லை, ஆக. 10: நெல்லையில் நடந்த பள்ளி குறுவட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் பாளை சவேரியார் பள்ளி அணிகள் 76 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி அடிகள் பாராட்டினார்.பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்டார அளவிலான குழு தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகளில் பாளை சவேரியார் பள்ளி 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நான்கு முதலிடமும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஒரு முதலிடம், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நான்கு முதலிடத்தையும் பெற்று சவேரியார் பள்ளி 2வது இடம் பெற்றது.

மேலும் 14,17,19 வயது பிரிவுகளில் கூடைபந்து, எறிபந்து போட்டிகளில் முதலிடமும், வளைகோல் பந்து உள்பட பல்வேறு குழு போட்டிகளில் முதலிடமும் பெற்று 76 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

போட்டிகளில் வெற்றிகளை குவித்த மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜோப்கென்னடி அடிகள், உடற்கல்வி இயக்குனர் சார்லஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டினார்.