Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நெல்லை, பாளை தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

தியாகராஜநகர், ஆக. 10: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த மாதத்திற்கான முகாம் நேற்று அனைத்து தாலுகா அலுவலத்திலும் நடைபெற்றது. நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் நெல்லை குடிமைப்பொருள் தனி தாசில்தார் விஜய் ஆனந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நாகரத்தினம், தனி வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.