Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதிரை வண்ணார் சமுதாய முன்னேற்ற சேவை மைய ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில், அக்.9: தமிழ்நாடு புதிரை வண்ணார் சமுதாய முன்னேற்ற சேவை மையம் சார்பாக ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேவை மைய தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் தங்கப்பாண்டி, பொருளாளர் அனல் முருகன், அமைப்பாளர் மின்னல் வீரன், கலைச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை பெரியகருப்பன் வரவேற்றார். கூட்டத்தில் புதிரை வண்ணார் சமுதாயத்தின் குறைபாடுகளையும் வாழ்வாதார மேம்பாடுகளையும் அரசிடம் எடுத்துரைக்கும் விதமாக கலந்தாய்வு நடந்தது.

இதில் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கடன் கிடைத்திடவும், நலவாரியம் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றிட உத்தரவிடவேண்டும் எனவும், சமுதாய மக்கள் கிராமப்புறங்களில் அதிகம் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், குறிப்பாக சமுதாய மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இடஒதுக்கீட்டில் 2 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவைச் சேர்ந்த புதிரை வண்ணார் சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.