வள்ளியூர், அக்.9: வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் \”அறிவை நோக்கிய ஆய்வுத்தேடல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ரெத்ன ஷீபா மினி வரவேற்றார். கல்லூரியின் தலைவர் பொறியாளர் லாரன்ஸ் தலைமை உரையாற்றினார். செயலர் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுஷ்மா ஜெனிபர் தொடக்க உரையாற்றினார். கருத்தரங்கம் இரண்டு அமர்வு நடைபெற்றது.
முதல் அமர்வில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர் முனைவர் இந்துபாலா ”ஆய்வுக் களங்களும் தரவுகளும்” என்ற தலைப்பில் இரண்டாம் அமர்வில் குற்றாலம் பராசக்தி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதனா தரமான ஆய்வுக்கான வழிமுறைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். தமிழ்த்துறை பேராசிரியர் மணிமேகலா நன்றி கூறினார். கருத்தரங்கில் முதுகலை, இளங்கலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.


