ஆறுமுகநேரி, அக். 8: காயல்பட்டினத்தில் திருமண ஏக்கத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். காயல்பட்டினம் மொகதும் தெருவை சேர்ந்தவர் கதிஜா மீரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் இப்ராகிம்(40), திருமணமாகவில்லை. திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், காயல்பட்டினத்தில் காலிமனையில் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது பெரியம்மா சித்திபாத்தியம்(60) ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருமண ஏக்கத்தில் இப்ராகிம் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


