Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழைய குற்றாலத்தில் பார்க்கிங் கட்டணமே வசூலிக்கப்படுகிறது

மதுரை, செப். 8: பழைய குற்றால பகுதியில் பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த வீரபாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதிக்கு செல்லும் வழியில் ஆயிரப்பேரி ஊராட்சியில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருவி வனத்துறைக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கையில் ஆயிரப்பேரி ஊராட்சி தரப்பில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது. வாகன நிறுத்துமிடம் அரசுக்கு சொந்தமானது. ஆனால் அதற்கு ஆயிரப்பேரி பஞ்சாயத்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு அரசிடம் முறையான அனுமதி எதையும் பெறவில்லை. எனவே, சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அதனை முறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அங்கு அமைக்கப்பட்டுள்ளது சுங்க சாவடி இல்லை. பார்க்கிங் வசதிக்காக தொகை வசூலிக்கப்படுகிறது. முறையாக டெண்டர் கோரி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். உத்தரவிட்டனர்.