திருவேங்கடம்,செப்.8: திருவேங்கடம் அருகேயுள்ள உமைய தலைவன்பட்டி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த சேதுபாண்டி மகன் சீனிவாசன் (37). இவர் வையகுண்டம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 1 மகன், 1 மகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபோல் கடந்த 5ம்தேதி தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன், அன்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவேங்கடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


