சுரண்டை,செப்.7: சுரண்டையில் ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சார்பில் அமைதியை தேடி வாழ்வியல் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் மூத்த மார்க்க அறிஞர் கமாலுதீன், டாக்டர் ராணி குமார் எம்பி, டாக்டர் கலை கதிரவன் எம்எல்ஏ, ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், போதையில் இருந்து விடுபட ஆலோசனை மற்றும் வாழ்வியல் கண்காட்சி நடைபெற்றது.
விழாவில் உஸ்மான் பிர்தவ்ஸி, தவெக செயலாளர் ராஜ பிரகாஷ், நியாஸ், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் முருகையா, சுலைமான் பிர்தவ்ஸி, டாக்டர் ஜனோபர் மல்லி, நகர திமுக செயலாளர் கூட்டுறவு கணேசன், கவுன்சிலர் அமுதா சந்திரன், சாமுவேல் மனோகர், ஆலடிப்பட்டி எஸ்.கே.ஆர், சங்கரேஸ்வரன், சீனிவாசன், ஹக்கீம், எழில், முருகன், பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


