புளியங்குடி,செப்.7: புளியங்குடி அரசு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல்கலாம் பொதுநல சேவை அமைப்பின் தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். நூலகர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் பாக்கியராஜ், பொதுநல சேவை அமைப்பின் நோக்கம் மற்றும் விழிப்புணர்வின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து என்எம்எம்எஸ் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.


