Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

களக்காட்டில் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்: நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

களக்காடு, செப். 5: களக்காட்டில் சாலையில் குளம்போல் தேங்கி நின்ற சாக்கடை மற்றும் கழிவுநீர் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது. களக்காடு, புதுத்தெரு ஆலமரம் அருகே சிதம்பரபுரம் செல்லும் பிரதான சாலையில், வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை, கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் அவலம் காணப்பட்டது. அத்துடன் பைக்குகளில் செல்லும் போது, கழிவுநீரில் பைக்குகள் சிக்கியதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை சிதம்பரபுரத்திற்கு செல்லும் பிரதான சாலை என்பதால், அதன் வழியாக தினசரி ஏராளமான மாணவ,மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். பஸ், கார்களும் சென்று வருகின்றன.

இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் சாக்கடை நீர் தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

மேலும் அப்பகுதியில் கோயில்களும் உள்ளன. சாக்கடை கழிவு நீர் தேங்கி நின்றதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்பட்டு வந்தனர். சாலைகளில் எந்நேரமும் சாக்கடை நீர் தேங்கி நின்றதால், சாலையும் சேதமடைந்து வந்தது. எனவே சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றவும், அங்கு இனி வருங்காலங்களில் சாக்கடை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்த கோரிக்கை செய்தி தினகரனில் நேற்று முன்தினம் (3ம் தேதி) படத்துடன் வெளியானது. இதையடுத்து கள ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், இவ்வாறு குளம்போல் தேங்கிநின்ற கழிவு நீரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி கழிவுநீரை அகற்றிய சுகாதார மேற்பார்வையாளர் வேலு மற்றும் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர்.