Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசியில் நாளை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்

தென்காசி, ஜூலை 3: தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜூலை 4 (சனி) மற்றும் 6 (திங்கள்) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

65 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதார்ர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்கள் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களால் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.