Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் மக்களை கொன்று குவிக்கும்இஸ்ரேலை கண்டித்து நெல்லை டவுனில்புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

நெல்லை, மார்ச் 2: ஈரான் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து நெல்லை டவுனில் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். யுஜியின் சமூக நீதி விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட டெல்லி ஜே.என்.யு மாணவர்களையும், சங்கத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும். கல்வி வளாகத்தில் சாதி வெறியைத் தடுத்திட ரோகித் சட்டம் கொண்டு வர வேண்டும். தலித்துகளை அவமானப்படுத்திய டெல்லி ஜேஎன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈரான் மக்களை அடாவடியாக கொன்று குவிக்கும் அமெரிக்க - இஸ்ரேலைக் கண்டித்தும் நெல்லை டவுனில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டவுன் உழவர்சந்தை அருகே மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். பிஎம் கிசான் உதவித் தொகை தொடர்ந்து பெற விவசாயிகள் இன்றைக்குள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் நெல்லை, மார்ச் 2: பிஎம் கிசான் உதவித் தொகை தொடர்ந்து பெற விவசாயிகள் இன்றைக்குள் (மார்ச் 2) பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக் கொள்ளுமாறு என முக்கூடல் வட்டார வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து முக்கூடல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முக்கூடல் வட்டாரத்தில் “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டம் 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துளள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பயனாளிகள் வரும் காலங்களில் தவணைத்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என உறுதியாக தெரிவித்துள்ளது.

முக்கூடல் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது ஆதார் எண், சிட்டா,ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணுடன் சென்று இன்றைக்குள் (மார்ச் 2) பதிவு செய்து தனித்துவ விவசாய அடையான எண் பெற்றுக் கொள்ளலாம். எனவே பி.எம் கிசான் தவணைத்தொகை தொடர்ந்து கிடைத்திட இது நாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் முக்கூடல் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையான எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.