Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனைவி பிரிந்து சென்ற வேதனை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

சமயபுரம், நவ.25: திருப்பைஞ்ஞீலி அருகே மனைவியை பிரிந்து ெசன்ற வேதனையில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பைஞ்ஞீலி அடுத்த வாழ்மால்பாளையம் மேலுரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). கொத்தனார். இவருக்கு துறையூர் தாலுகா எரகுடி கிராமத்தை சேர்ந்த சம்பூரணம் (40) என்ற பெண்ணுடன் திருமணமாகி சரவணன், சசிகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம டைந்த சம்பூரணம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு துறையூரில் உள்ள நீதிமன்றத்தில் சம்பூரணம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் கடந்த மாதம் துறையூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய பாலகிருஷ்ணனிடம் அடுத்து வரும் வாய்தாவில் இருந்து மாதந்தோறும் சம்பூரணம் மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சமாக 35 ஆயிரம் வழங்குமாறு நீதிபதி கூறினார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன் நேற்று நீதிமன்ற வாய்தாவிற்கு செல்லாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.