Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

லால்குடி, ஜூலை 3: லால்குடி ரயில் நிலையம் அருகே கூட்ஸ் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (48). டிரைவர். இவர் தனது மனைவி ராணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லால்குடி காமராஜர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். ராஜலிங்கம் எதற்காக ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.