திருச்சி, டிச.8: திருச்சி மாவட்ட உழவர் பயிற்சி மையம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சி டிச9ம் தேதி முதல் டிச.14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அங்கக வேளாண்மை குறித்தும், அங்கக இடு பொருள்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், மண்புழு உரம் போன்றவை தயாரிப்பு முறைகள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்திலிருந்து 18 முதல் 45 வயது வரை உள்ள 28 இளைஞர்கள் கலந்து கொள்ள முடியும். கிராமபுற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர 8838126730, 9080540412, 9171717832 ஆகிய எண்களை கொண்டு நாளை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்வோர் 6 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.


