2,500 போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு திருச்சி மாவட்டத்தில் 50,779 விவசாயிகளுக்கு ரூ.247.15 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
திருச்சி, செப்.17: திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களைச் சேர்ந்த 50,779 விவசாயிகளுக்கு ரூ.247,15,05,407 (இருநூற்று நாற்பத்து ஏழு கோடியே பதினைந்து லட்சத்து ஐந்தாயிரத்து நானூற்று ஏழு மட்டும்) பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசாணை கடந்த 19.06.2026 அன்று வெளியிடப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 17.08.2026 அன்றைய சட்டப்பேரவை விதி 110-ன் கீழான அறிவிப்பில் 2026 ஆண்டிற்கான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கான கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.75,000 முதல் ரூ.1,000,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.75,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.1,00,000க்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய வாரியாக தள்ளுபடி விவரங்கள்:
அந்தநல்லூர் ஒன்றியம்: 1,197 விவசாயிகளுக்கு ரூ.5,53,41,755, மணிகண்டம் ஒன்றியம்: 1,466 விவசாயிகளுக்கு ரூ.6,97,07,185, திருவெறும்பூர் ஒன்றியம்: 2,541 விவசாயிகளுக்கு ரூ.11,39,45,921, மணப்பாறை ஒன்றியம்: 3,185 விவசாயிகளுக்கு ரூ.16,83,69,613, மருங்காபுரி ஒன்றியம்: 3,713 விவசாயிகளுக்கு ரூ.19,77,12,553, வையம்பட்டி ஒன்றியம்: 2,744 விவசாயிகளுக்கு ரூ.14,16,18,885, இலால்குடி ஒன்றியம்: 4,049 விவசாயிகளுக்கு ரூ.18,54,35,268, மண்ணச்சநல்லூர் ஒன்றியம்: 3,077 விவசாயிகளுக்கு ரூ.15,32,45,877, புள்ளம்பாடி ஒன்றியம்: 7,978 விவசாயிகளுக்கு ரூ.38,71,65,500, முசிறி ஒன்றியம்: 3,087 விவசாயிகளுக்கு ரூ.14,89,91,878, தா.பேட்டை ஒன்றியம்: 3,422 விவசாயிகளுக்கு ரூ.16,69,11,859, துறையூர் ஒன்றியம்: 5,652 விவசாயிகளுக்கு ரூ.26,79,54,122, தொட்டியம் ஒன்றியம்: 4,621 விவசாயிகளுக்கு ரூ.22,24,25,214
உப்பிலியபுரம் ஒன்றியம்: 4,047 விவசாயிகளுக்கு ரூ.19,26,79,777, தமிழ்நாடு அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் மொத்தம் 50,779 விவசாயிகளுக்கு ரூ.247,15,05,407 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


