திருச்சி, செப்.17: திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது இளைய மகன் கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையிலுள்ள அவரது வீட்டில் ஜெயராஜ் தனியாக வசித்து வருகிறார். செப்.10ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு, பாலக்கரையிலுள்ள தனது மூத்த மகனின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின்னர் செப்.13ம் தேதி காலை ஜெயராஜின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் ஜெயராஜிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போா்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


