உடன்குடி, செப். 30: உடன்குடி அருகே உள்ள மணிநகர் ராமசாமிபுரத்தை சேர்ந்த வரதராஜ் மகன் அரவிந்த் (30), திருச்செந்தூர் அரசினர் ஐடிஐயில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு குலசை கடற்கரை பூங்கா பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார்.
அங்கு வந்த போதை ஆசாமிகள், அரவிந்தை வழிமறித்து தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


