எட்டயபுரம், செப். 30: மேலஈராலில் ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐஎம்சி மற்றும் விவேகானந்தா கபடி குழு சார்பில் 17ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 29 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் முதல் பரிசை விருதுநகர் எஸ்எஸ்ஏ பிரதர்ஸ் அணியும், 2ம் பரிசை மேலஈரால் விவேகானந்தா கபடி குழு அணியும், 3ம் பரிசை மேலஈரால் ஐஎம்சி அணியும், 4ம் பரிசை கீழஈரால் ஜேம்ஸ் கபடி அணியும் பெற்றன.
அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாசறை செயலாளரும், கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான கவியரசன் கலந்து கொண்டு இறுதிப்போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கினார்.விழாவில் அதிமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் செல்வம், பாசறை நிர்வாகிகள் பொன்செல்வம், சூரியா, சக்தீஸ்வரன், செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.


