Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

குலசை கோயில் வருஷாபிஷேக விழா

உடன்குடி, ஏப். 30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு மங்கள வாத்தியம், 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உடன்குடி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மதன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாண்பாஸ்கர், அஸ்ஸாப், மாவட்ட பிரதிநிதிகள் சிராசுதீன், ஜெயப்பிரகாஷ், ஓட்டுநரணி அலாவுதீன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோசாலி சுமைதா, உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 8 மணிக்கு அபிஷேக திரவியங்கள் மற்றும் சீர்வரிசைகள் திருக்கோயில் வலம் வருதல், காலை 10.30 மணிக்கு சங்காபிஷேகம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா வருதல் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வள்ளிநாயகம் மற்றும் சலவையாளர் கலா தசரா குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தரிசனம் செய்தனர்.