தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு காசநோய் குறித்து பேசினார்.
இதில் கருப்பசாமி, மோகன், மாரியப்பன், இசக்கி மகாராஜன், செந்தில் குமரன், சீனி வாசுகி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செய்திருந்தனர்.


