ஸ்ரீவைகுண்டம், செப். 26: ஸ்ரீவைகுண்டத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கம், இந்து முன்னணி ஆட்டோ சங்கம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிவகளை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ரவீந்தரன், கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ரதி செல்வம், மருத்துவ பணியாளர் சசிகலா ஸ்ரீரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் முருகன், ஸ்ரீரெங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


