கோவில்பட்டி, செப். 26: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவில்பட்டி சப்-கலெக்டரிடம் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கலாசார நட்புறவு கழக மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் துரைராஜ், ஐஎன்டியூசி ராஜசேகரன், பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், திராவிடர் கழகம் செண்பகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


