கோவில்பட்டி, செப். 25: கோவில்பட்டி அருகே உள்ள ஆத்திக்கிணறு மேலக்காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (55). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் வீட்டிற்குள் செந்தாமரை என்பவர் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். இதனால் பொன்னுச்சாமி, செந்தாமரையை கண்டித்துள்ளார்.
அப்போது செந்தாமரை மற்றும் அவரது சகோதரர் பாரதி (29) ஆகியோர் பொன்னுச்சாமியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்னுச்சாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து பாரதியை கைது செய்தனர்.


