Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முத்தையாபுரத்தில் முப்பெரும் விழா

ஸ்பிக்நகர், செப். 25: மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பு சார்பில், சிறப்பான தொண்டுகள் புரிந்த கிராமப்புற பெண்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் விருதுகள் வழங்கும் விழா, மரம் நடும் மாமனிதர் புத்தக வெளியீட்டு விழா, 3000 மரக்கன்றுகளுடன் மஞ்சள் துணிப்பைகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா, முத்தையாபுரத்தில் நடைபெற்றது.

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேரனுமான ஷேக் சலீம் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி புத்தகத்தை வெளியிட்டும், மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பைகளை வழங்கியும் பேசினார். கிராம உதயம் அமைப்பின் நிர்வாக இயக்குநரும், வழக்கறிஞருமான புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார்தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்துரை வழங்கினார்.கோபால சமுத்திரம் கிராம உதய நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், ஆறுமுகவடிவு, பிரேமா, முருகசெல்வி, ஆரிய நாச்சியார், முத்துசெல்வன், ஆனந்தசெல்வன், லிஜியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலக தலைமை கணக்காளர் ஜெசிந்தா மலர்மதி நன்றி கூறினார்.