Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சாத்தான்குளத்தில் கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக்

சாத்தான்குளம், செப். 23: கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரை கண்டித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்த கருத்துகளை கண்டித்தும், கூட்டுறவு சங்க பணியாளர்களை, குறிப்பாக செயலாளர்கள் உள்பட அனைவரையும் தரக்குறைவாக பேசியதாக தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ளக் கோரி கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைநகரில் கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சாத்தான்குளம் ஒன்றியத்தில் கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடந்தது. இதனால் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள 7 கூட்டுறவு கடன் சங்கங்களும், கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் 30 ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கூட்டுறவு கடன் சங்க மற்றும் ரேஷன் கடை சேவை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.