Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பாக முகவர்கள், மகளிரணி ஆலோசனை

விளாத்திகுளம், செப். 23: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த திமுக பாக முகவர்கள், மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கொளத்துப்பாளையம் (பேரூர் பாகம் எண் 205) காந்திஜி நகரில் பாக முகவர்கள், மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இதில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.