ஏரல், அக். 22: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழாவில் அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர்வீதி வலம் வரும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து காண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
சிகர நிகழ்ச்சியான தசராவையொட்டி நேற்று முன்தினம் இரவு கரகாட்டம், இரவு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வீதி வலம் வந்து கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


