Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

காரை உடைத்து ரூ.6.52 லட்சம் கேமராக்கள் துணிகர திருட்டு

உடன்குடி, அக். 22: குலசை தசரா திருவிழாவில் காரை உடைத்து ரூ.6.52 லட்சம் மதிப்பிலான கேமரா உபகரணங்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குலசை தசரா திருவிழாவையொட்டி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் வருகை தந்து தசரா திருவிழாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். கோவை மாவட்டம் சரவணன்சிட்டி பகுதியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் தரணிதரன்(31) என்பவரும் கடந்த 19ம் தேதி காரில் குலசை கோயிலுக்கு வந்துள்ளார்.

இரவு 10.30 மணியளவில் காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். காருக்குள் இருந்த 5 விலை உயர்ந்த கேமராக்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.