Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூர், அக். 22: திருச்செந்தூர் கடலில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடற்கரையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட 2 அடி நீளமுடைய சிறிய ஆமை ஒன்று நேற்று முன்தினம் இரவு இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

அலையின் சீற்றத்தால் பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் நேரில் வந்து பார்த்தனர். தொடர்ந்து ஆமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.