Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குலசை கோயிலில் திருவிளக்கு பூஜை

உடன்குடி, ஆக. 21: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள பழமையான சிவகாமி அம்மன் உடனுறை ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி மாதப் பிறப்பை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜைத் தொடர்ந்து திருக்காப்பிடுதல், மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 6.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு பள்ளியறை பூஜை, இரவு 8 மணிக்கு திருக்காப்பிடுதல் நடந்தது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.