Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவர் கைது

ஆறுமுகநேரி, ஆக. 21: ஆறுமுகநேரி மேல சண்முகபுரத்தை சேர்ந்த ராமஜெயம் மகன் பொன்துரை (24). ஏரல் வடக்கு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சிராஜூதீன் மகன் தஸ்லீம் அலி (30). இவர்கள் இருவரும் வெவ்வேறு கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து எஸ்ஐ சுந்தரம் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பொன்துரையை தூத்துக்குடி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டு பொன்துரையை விடுதலை செய்தனர். தஸ்லீம் அலியை தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.