Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காளையை வெட்டிய விவசாயி கைது

உடன்குடி, ஆக. 20: குரும்பூரில் வாழைத்தோட்டத்திற்குள் மாடு மேய்ந்ததால் ஆத்திரமடைந்த விவசாயி, காளையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குரும்பூர் வடக்கு மாரந்தலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(54). இவர் வளர்க்கும் மாடுகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் புன்னைசாத்தான்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வாழைத்தோட்டத்திற்குள் சென்று மேய்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், வாழைத்தார் வெட்டும் அரிவாளால் காளையை வெட்டினார். இதனை தட்டிக்கேட்ட தனசேகரனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.