உடன்குடி, ஆக. 20: உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்ற குரும்பூரைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாயமானார். குரும்பூர் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பிரசாந்த்குமார்(30). பிஇ பட்டதாரியான இவர், உடன்குடி அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், இரவு வேலை முடித்து வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கராஜ் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிந்து மாயமான இளைஞரை தேடி வருகிறார்.



