Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி

தூத்துக்குடி,ஆக.19: இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி அக்.31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து அஞ்சல்துறையின் தூத்துக்குடி கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த 1ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அன்னை பூமிக்கு ஒரு கடிதம் - இயற்கையைப் பாதுகாக்கும் என் உறுதிமொழி என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கடிதம் எழுத வேண்டும். கடிதத்தை, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித அட்டை பிரிவில் 500 வார்த்தைகளுக்கும், கடித உறை பிரிவில் ஆயிரம் வார்த்தைகளுக்கும் மிகாமல் கடிதம் எழுத வேண்டும்.

கடிதம் கட்டாயம் கைப்பட எழுதப்பட்டிருக்க வேண்டும். 1.1.2026 நிலவரப்படி 18 வயது நிறைவு பெற்றவரா, 18 வயது நிறைவு பெறாதவரா என்ற விவரத்தை கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியாளரின் பெயர் மற்றும் முழுமையான முகவரியும் தவறாமல் இடம்பெற வேண்டும்.

பரிசுகள் மாநில அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்படும். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.