Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விஜயராமபுரம் சாலை சீரமைப்பு

சாத்தான்குளம், ஆக. 14: சேதமடைந்து காணப்பட்ட விஜயராமபுரம் செல்லும் சாலை, தினகரன் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர். சாத்தான்குளத்தில் இருந்து விஜயராமபுரம், சிறப்பூர் வழியாக போலையர்புரம், தட்டார்மடம், நடுவக்குறிச்சி, இடைச்சிவிளை, திசையன்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக காலை முதல் இரவு வரை ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

இதில் விஜயராமபுரம் விலக்கு பகுதியில் இருந்து விஜயராமபுரம் வரை சாலையோரங்களில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்களாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்து கடந்த 23ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து விஜயராமபுரம் விலக்கு பகுதியில் இருந்து விஜயராமபுரம் வரை சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.