செய்துங்கநல்லூர், ஆக. 13: செய்துங்கநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சுடலை மனைவி செல்லம்மாள் (50). நேற்று மதியம் செல்லம்மாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஸ்விட்ச் போர்டில் படிந்திருந்த தூசியை அகற்ற முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து செல்லம்மாள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சத்தம் கேட்டு சென்ற உறவினர்கள், அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்லம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் விசாரணை நடத்தி வருகிறார்.



