திருச்செந்தூர், ஆக. 13: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.
அதேபோல பருவநிலை மாற்றத்தாலும் சில நேரங்களில் கடல் உள்வாங்குகிறது. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அய்யா கோயில் அருகே சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடினர்.



