Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நிதியியல் கல்வி முகாம்

சாத்தான்குளம், ஆக. 12: சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு நிதியியல் கல்வி முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாத்தான்குளம் சரக மேற்பார்வையாளர் காளிமுத்து தலைமை வகித்து டிஜிட்டல் பரிவர்த்தனை விழிப்புணர்வு, சங்கத்தின் செயல்பாட்டில் உள்ள மைக்ரோ ஏடிஎம் சேவைகள் மற்றும் இதர வங்கி சேவைகளை எளிதில் அனைவரும் பெறும் வழிமுறைகளை குறித்து எடுத்துரைத்தார்.

அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொறுப்பு செயலாளர் அருள்தாஸ் முன்னிலை வகித்து வரவேற்றார்.  முகாமில் சிற்றெழுத்தர் ஸ்வேகா, விற்பனையாளர்கள் ராஜசிங், ஜெகன், லிங்கப்பாண்டி, பொது சேவை மைய பணியாளர் ஜெனிபர், நகை மதிப்பீட்டாளர் பரமசிவன் மற்றும் மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டனர். எழுத்தர் பொன்னுத்தாய் நன்றி கூறினார்.